ஜஸ்பிரித் பும்ராவின் இளம்வயது சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்.!!
Umran malik breaks bumrah record
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65 ஆவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய முதல் 5 வீரர்கள் பட்டியலில் உம்ரான் மாலிக் 4வது இடத்தில் உள்ளார். மேலும், ஐபிஎல் சீசன் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை உம்ரான் மாலி படைத்தார். இதற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் பும்ரா தனது 23 வயதில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது உம்ரான் மாலிக் மாலிக் தனது 22 வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
English Summary
Umran malik breaks bumrah record