அமெரிக்க ஓபன் டென்னிஸ்!....இத்தாலி வீரர் ஜானிக் சினெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி  நடைபெற்றது. இதில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் - ரஷியா நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் மெத்வதேவ் ஆகியோர் மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சினெர் 6-2,1-6, 6-1,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  

இதற்கிடையே நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின்  அரையிறுதி போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி  3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Open Tennis Italian Janic Ciner Advances to the Semi Finals


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->