நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

நியூயார்க் நகரில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி  இன்று தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), நோவக் ஜோகோவிச் (செர்பியா), கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஆகிய மூவர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோரில் யாரவது ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.629 கோடியாகும்.  கடந்த ஆண்டை விட 15 சதவீதம் இந்த ஆண்டு அதிகமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு ரூ.30 கோடி பரிசாக வழங்கப்படும். 

அதன்பின் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும் பெறுவார்கள். 2-வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்படும். ஒற்றையர் முதல் சுற்றில் கால் பதித்தாலே ரூ.83 லட்சம் தொகையுடன் தான் வெளியேறுவார்கள். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.6¼ கோடி பரிசாக வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Open Tennis starts today in New York City


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->