இங்கிலாந்து அணியின் சாதனையை முறியடித்த தமிழ்நாடு அணி! மொத்தம் 5 உலக சாதனை புரிந்து அபாரம்!
Vijay hasate tamilnadu team new 5 world record
இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் அருணாசல பிரதேசத்தை தமிழக அணி எதிர்கொண்டது. ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டாஸ் வென்ற அருணாசல பிரதேச அணி, தமிழக அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெகதீசன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் 100 ரன்களை 76 ரன்களில் எடுத்த ஜெகதீசன், அடுத்த 100 ரன்களை 38 பந்துகளில் எடுத்தார்.
277 ரன்கள் எடுத்த போது ஜெகதீசன் ஆட்டமிழந்தார். மொத்தம் 141 பந்துகளில், 15 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற புதிய உலக சாதனையைப் படைத்தார்.
மேலும், தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் 5-வது சதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையும் படைத்தார். மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனும் தன் பங்கிற்கு 102 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மேலும் ஒரு புதிய உலக சாதனையாக முதல் விக்கெட்டுக்கு ஜெகதீசனும் சாய் சுதர்சனும் 38.3 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு தமிழக அணி 506 ரன்கள் குவித்தது. இதுவும் ஒரு புதிய உலக சாதனையாக பதிவாகியுள்ளது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் எடுத்திருந்த சாதனையைத் தமிழக அணி முறியடித்து உள்ளது.
இதனையடுத்து களமிறங்கிய அருணாசல பிரதேச அணி, 28.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 435 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழக அணி மற்றும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
English Summary
Vijay hasate tamilnadu team new 5 world record