விஜய்யின் தளபதி 68 படத்தின் டைட்டில் இதுவா.? உற்சாகத்தில் CSK ரசிகர்கள்.!
Vijay in Thalapathi 68 movie name CSK
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் கௌதம் மேனன் ஆக்சன் கிங் அர்ஜுன் ஹாலிவுட் நடிகர் சஞ்சய் நடிகை பிரியா பவானி சங்கர் திரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 68வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்க, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதனிடையே தளபதி 68 படத்தின் பூஜை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதே நாளில் இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி 68 படத்திற்கு CSK என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தீவிர சிஎஸ்கே ரசிகர் என்பதால் இந்த பெயர் வைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Vijay in Thalapathi 68 movie name CSK