#ஆசியகோப்பை : டிராவிட்டிற்கு கொரோனா தொற்று.. புதிய பயிற்சியாளர் நியமனம்.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கான இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவா் விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்திய அணியுடன் அவரால் உடனடியாகப் பயணிக்க முடியாமல் போனது.

இதையடுத்து அணியின் பயிற்சி மற்றும் தயாா்நிலைக்காக லக்ஷ்மண் அமீரகத்துக்குச் செல்கிறாா். ராகுல் டிராவிட் கொரோனாவிலிருந்து மீண்டு இந்திய அணியுடன் இணையும் வரை லக்ஷ்மண் அங்கு பொறுப்பில் இருப்பாா்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 11-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

 இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஓமன் என 6 அணிகள் இதில் களம் காண்கின்றன. இதில் இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஆகஸ்ட் 28 ஆம் தேதி விளையாடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VVS Laxman appoint interim Indian team head coach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->