நாமே நமது பேட்ஸ்மேன்களின் மன உறுதியை குறைத்துள்ளோம்!...இந்திய கிரிக்கெட் அணி மீது ஹர்பஜன் சிங் கடும் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


டி20 ஒரு நாள் தொடரில் கடைசியாக இலங்கையில் நடைபெற்ற ஆட்டத்தில், இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து இந்திய அணி தோற்றது. இந்த தோல்விக்கு இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது.  

இந்த நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்களில் திணறுவதற்கு இந்திய அணி நிர்வாகமும் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், "நாம் அதிகளவில் சுழலக் கூடிய பிட்ச்களில் விளையாட தொடங்கிவிட்டோம். நாம் வெற்றி பெற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டரை நாட்களுக்குள் வெல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. சாதாரண பிட்ச்களை தயார் செய்துவிட்டு, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நன்றாக ஸ்பின்னாக கூடிய பிட்ச்களை தயார் செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். 

மேலும், தற்போது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களிடம் திணறுவதை பற்றி யாரும் பேசுவதே இல்லை என்றும், நாமே நமது பேட்ஸ்மேன்களின் மன உறுதியை குறைத்து மோசமாக ஆட்டமிழக்க காரணமாக அமைந்திருக்கிறோம் என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்களில் திணறுவதற்கு இந்திய அணி நிர்வாகமும் முக்கிய காரணம் என்று விமர்சித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We ourselves have reduced the morale of our batsmen Harbhajan Singh strongly accused the Indian cricket team


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->