தோனி, கோலி, சர்மா குறித்து பேசிய பும்ரா......கூறியது என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில்  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, மிக முக்கிய காரணமாணவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு எம்.எஸ் தோனி தலைமையில் இந்திய அணியில்  அறிமுகமான பும்ரா, கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தது.  பின்னர் 2018-ம் ஆண்டு விராட் கோலி தலைமையில் அறிமுகமான டெஸ்ட் கிரிக்கெட்டில்,  இந்தியாவின் வெற்றி நாயகனாக அவதரித்தார்.

இந்நிலையில் இந்தளவுக்கு தாம் வளர்வதற்கு உதவிய இந்திய கேப்டன்கள் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை பற்றி பும்ரா பேசியுள்ளார்.  இது குறித்து பேசியுள்ள  பும்ரா, வீரர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதை அறிந்து செயல்படுபவர் ரோகித் சர்மா என்றும், அவர் பவுலர்களின் கருத்துகளை கேட்க திறந்த மனதுடன் தயாராக இருப்பார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் எம்எஸ் தோனி எனக்கு நிறைய பாதுகாப்பும் ஆதரவும் அளித்தார். அவர் எப்போதும் தன்னுடைய உள்ளுணர்வுகள் மீது அதிக தன்னம்பிக்கை வைப்பார் என்று கூறியுள்ளார்மேலும் விராட் கோலி ஆற்றலால் வழி நடத்தக்கூடிய ஆர்வம் மிகுந்தவர். அவர். கேப்டனாக இல்லையென்றாலும் விராட் கோலி இப்போதும் தலைவராக இருக்கிறார். கேப்டன் என்பது ஒரு பதவி மட்டுமே. ஏனெனில் ஒரு அணியை 11 பேர்தான் நடத்துகின்றனர் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What did Bumrah say about Dhoni Kohli and Sharma


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->