டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் எப்போது ஓய்வு..? அவரே கூறிய பதில்..!
When will Virat retire from Test cricket
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக செயல்பட்டார். இதன் காரணமாக இந்திய அணி கோப்பையை வெல்வதில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. விராட் பாகிஸ்தானுக்கு எதிராக சதமும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதமும் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தவர்.
முன்னதாக நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விக்கு காரணமாவும் விராட் கோலி இருந்தார்.
-yugeq.jpg)
அதனால், அவரை பெரிய அளவில் விமர்சித்தனர். அவர் ஓய்வு பெற வேண்டும் சிலர் விமர்சித்தனர். அந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் 'கிங்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
36 வயதை எட்டியுள்ள விராட், ஏற்கனவே டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது ஓய்வு? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மறைமுக கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.
-ynyze.jpg)
அதில், "அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் நான் பங்கேற்காமல் போகலாம். எனவே முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன். ஓய்வுக்கு பிறகு நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. இது குறித்து சக வீரர் ஒருவரிடமும் கேட்டேன். அவரும் அவரும் இதே பதிலைத்தான் சொன்னார். ஒருவேளை நான் உலகமெங்கும் பயணிக்கலாம்" என்று கூறினார்.
இந்த பதிலால் விராட் கோலி இன்னும் 01 அல்லது 02 ஆண்டுகளில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
When will Virat retire from Test cricket