பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் அபிஷேக் சர்மா, நிதிஷ் மற்றும் வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்..!
Will Abhishek Sharma Nitish and Varun Chakravarthy be included in the BCCI salary contract list
பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த பட்டியலில் அபிஷேக் சர்மா, நிதிஷ் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் 03 டெஸ்ட் அல்லது 08 ஒருநாள் அல்லது 10 சர்வதேச 'டி-20'-இல் விளையாடியவர்கள் இப்பட்டியலில் இடம் பெறுவர்.

அதன் படி, இளம் வீரர் அபிஷேக் சர்மா (17 'டி-20'), 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று, 04 டெஸ்டில் பங்கேற்ற 'ஆல் ரவுண்டர்' நிதிஷ் குமார், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி (04 ஒருநாள், 18 'டி-20') புதிய பட்டியலில் சேர்க்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதில், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, 02 டெஸ்ட், 05 ஒருநாள், 1 'டி-20'-இல் பங்கேற்றுள்ளார். பி.சி.சி.ஐ., விதி இதில் பொருந்தாது. இருந்தாலும் அவர் ஒட்டு மொத்தமாக 08 சர்வதேச போட்டியில் பங்கேற்றதால், ஹர்ஷித்துக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இது தவிர, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற பி.சி.சி.ஐ., உத்தரவை பின்பற்றாத காரணத்தினால் ஷ்ரேயஸ் ஐயர் கடந்த ஆண்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தார் ஷ்ரேயஸ்.
அத்துடன், இந்திய அணி கோப்பை வெல்ல உதவியாக இருந்தவர்களில் ஐவரும் முக்கியமானவர். இதன் படி, இவரும் மீண்டும் சம்பள ஒப்பந்தத்தில் இடம் பெறலாம் என எதிர்பார்ப்படுகிறது இதில், சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா, ஆகியோர் ஏ+ பிரிவில் தொடர உள்ளனர்.
English Summary
Will Abhishek Sharma Nitish and Varun Chakravarthy be included in the BCCI salary contract list