தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியை இம்முறையாவது வெல்லுமா?
Will South Africa beat Afghanistan this time
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 9 ஆவது ஐசிசி, 50 ஓவர்கள் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் இப்போட்டிகள் வரும் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மற்றும் பாதுகாப்பு காரணமாக துபாயில் நடக்கிறது.

கடும் போட்டி:
மேலும் இதில் குறிப்பிட்ட டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. போட்டியில் ஒவ்வொரு ஆட்டமும் மிக முக்கிய ஆட்டமாக கருதப்படுகிறது. ஒரு போட்டியில் தோற்றாலும் அரை இறுதி வாய்ப்பை நழுவி விடும் என்பதால் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்யாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்:
இந்நிலையில் இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. மேலும் குறிப்பிடத்தக்கதாக சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு முறையும் தோல்வியுற்றது. ஆகையால் தென் ஆப்பிரிக்கா அணி இன்று தனது ஆட்டத்தை முழுமையாக காண்பிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது. இது குறித்து மக்களும் கடந்த பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா அணி எந்த போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பதால் இப்போட்டியிலாவது வெற்றியடையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Will South Africa beat Afghanistan this time