மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி! - Seithipunal
Seithipunal


துபாய்: 9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ளது.இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் ஆப்பிரிக்க அணியில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும்,  அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து  125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இறுதியில், இங்கிலாந்து அணி 19.2ஓவரில் 3 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women 20 over world cup england beat south africa and win


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->