இப்படியும் ஒரு கேவலமான ஆட்டம்! அநியாயத்தின் உச்சம்! நெருப்பாய் கொதித்த இந்திய கேப்டன்! - Seithipunal
Seithipunal


பங்களாதேஷ் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்துள்ளது.

இந்த ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில்,
 கோப்பையை வெல்வதற்கும், தொடரை கைப்பற்றுவதற்கும் உண்டான மூன்றாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு, 225 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஃபர்கானா ஹோக் 107 ரன்களை விலாசினார். 

 

 

இதன் மூலம் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் பங்களாதேஷ் வீராங்கனை என்ற சாதனையையும் ஃபர்கானா ஹோக் படைத்துள்ளார்.

இதனை அடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 33 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

அப்போதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புனை நிகழ்ந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 66 ரன்கள் தான் தேவை, இந்திய அணிக்கு எந்த பதட்டமும் இல்லை. ஆனால், தோல்வியின் பதற்றம் பங்களாதேஷ் அணியையும், நடுவரையும் தான் அது தொற்றி கொண்டது.

நடுவருக்குமா? ஆம், நடுவருக்கும் தான். அவரின் செயல்கள் அதையே குறிப்பதாக இந்திய ரசிகர்கள் கடுமையாக தற்போது விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.

அப்படி என்ன தான் நடந்தது ஆட்டத்தில்?

34 வது ஓவரின் 4 பந்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களில் LBW மூலம் ஆட்டமிழந்தார். நடுவர் விக்கெட்டை அறிவித்தபோது, 

"பந்து பேட்டில் தான் பட்டது, பேடில் படவில்லை என்று ஆவேசமாக கத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், உடனடியாக நடுவருக்கு பாடம் புகட்டும் வகையில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றினார்.

ஆம், தனது பேட்டால் ஸ்டம்பை அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். அப்போது மைதானத்தில் இருந்த பங்களாதேஷ் அணி வீரர்களும், ரசிகர்களும் உறைந்துபோய் நின்றனர்.

இந்த தொடர் முழுக்கவே நடுவர்களின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கடைசி ஆட்டத்தில் தனது முழு கோபத்தையும் வெளிக்காட்டிவிட்டு நடையை கட்டினார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஹர்லீன் தியோல் 42 வது ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் தனது 77 வது ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதே 42 வது ஓவரின் கடைசி பந்தில் தீப்தி சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அமன்ஜோத் கவுர் 10, ஸ்னே ராணா 0, தேவிகா வைத்யா 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 225 ரன்கள் எடுத்து. ஆட்டமும், தொடரும் சமனில் முடிந்தது.

இந்திய அணி 34 ரன் எடுக்க முடியாமல் 6 விக்கெட்களை இழந்து ஆட்டத்தை பறிகொடுத்தது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

42 வது ஓவரில் ஹர்லீன் தியோல் ரன் அவுட் ஆகி வெளியேறிய போதே ஆட்டம் பங்களாதேஷ் அணி பக்கம் திரும்பியது.

இல்லை இல்லை திருப்பட்டது, இந்திய அணியின் வெற்றி பறிக்கப்பட்டது என்றும் சொல்லலாம். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. 

ஆட்டத்தின் கடைசி ஓவரின் 3-வது பந்தில் மேக்னா சிங் விக்கெட்டும் நடுவரின் தவறான தீர்ப்பாகவே வழங்கப்பட்டது. ஆம், பந்து பேட்டில் படவே இல்லை, எதிர் அணியினர் விக்கெட் கேட்டதும் சொல்லிவைத்தார் போல் நடுவர் கையை தூக்கி அவுட் வழங்கினார்.

இந்திய அணி வெற்றி பெற அனைத்து வகையான வாய்ப்புகள் இருந்தும், அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால், நடுவரின் செயல்களால் தோல்வியை தழுவியது என்றே இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மைதானத்தில் தான் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது குறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவிக்கையில், இந்த தொடரில் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். நடுவர்கள் அளித்த சில முடிவுகளால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

குறிப்பாக கிரிக்கெட்க்கு அப்பாற்பட்டு நடுவர்கள் நடந்து கொண்டது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அடுத்த முறை நாங்கள் பங்களாதேஷிற்கு விளையாட வரும்போது, இந்த வகையான நடுவர்களை எப்படி சமாளித்து ஆட வேண்டும் என்று தயாராகி வருவோம். 

கோப்பையைக்கான புகைப்படம் எடுக்கும் போது பங்களாதேஷ் அணி கேப்டனும், வீராங்கனைகளும் அவமரியாதை செய்யும்படி நடந்து கொண்டுள்ளனர்" என்று கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women ind vs ban one day series 2023 umpire Harmanpreet Kaur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->