மகளிர் டி20 கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி - Seithipunal
Seithipunal


அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதலாவதாக  டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இலங்கை-அயர்லாந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் அபாரமாக பேட்டிங் ஆடிய கேபி லூயிஸ் சதம் 119 ரன்அடித்து அசத்தினார்.

இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை, 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு அணிகளும் 1-1 என்ற தொடரில் சமநிலையில் உள்ளதால், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women s t20 cricket ireland thrill to beat sri Lanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->