பெண்கள் உலகக் கோப்பை தொடர்!...இன்று கோலாகலமாக தொடங்குகிறது! - Seithipunal
Seithipunal


அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் 9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.  10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ள நிலையில், அணிகள் இரண்டு  பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா,  பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், 'புதுமுகம்' ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற உள்ளது.

முதல் நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளது.  தொடர்ந்து இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women world cup series starts with a bang today


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->