குற்றச்செயல்களை தடுக்க "உரக்கச்சொல்" செயலி அறிமுகம் - தஞ்சை காவல் அதிகாரிகள் அசத்தல் நடவடிக்கை!
To prevent crime Introduction of urakkasol app thanjavur police officers crazy action
தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில், தஞ்சாவூர் சரகக் டி.ஐ.ஜி. ஜியாஉல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களும் பங்கேற்றால், அவற்றை விரைவாக தடுத்துவிடலாம் என்பதற்காக உரக்கச் சொல் என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை பிளே ஸ்டோர் ஆப் வழியாக பதிவிறக்கம் செய்து, பயனாளரின் பெயர், கைப்பேசி எண்ணைப் பதிவிட்டால், ஒரு முறை கடவுச்சொல் வரும். அதைப் பதிவிட்டால் செயலி இயங்கத் தொடங்கும் என்று தெரிவித்தனர்.
மேலும், குற்றம் நிகழும் இடம், என்ன குற்றம், காவல் நிலையம் போன்றவற்றை குறிப்பிட்டால், அது தொடர்புடைய காவல் அலுவலர்களுக்குச் செல்லும். இதையடுத்து, உடனடியாக காவலர்கள் நிகழ்விடத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பர் என்று கூறினர்.
இதில் நடவடிக்கை விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், கைது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை காவல் துறை உயர் அலுவலர்கள் கண்காணிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர்கள், பதிவு செய்யும் புகார்தாரர்கள் பெயர், கைப்பேசி எண் போன்ற அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படும் என்றும், அதேசமயம் தவறான தகவலை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
English Summary
To prevent crime Introduction of urakkasol app thanjavur police officers crazy action