#ASIACUP2022 : இறுதிப்போட்டி முன்னேறுமா இந்தியா.? அரையிறுதிப் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதல்.!
Womens Asia Cup 1st semi final INDW vs THAIW match today
ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா-தாய்லாந்து இன்று அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.
ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் இந்திய அணி 6 போட்டிகளில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 6 போட்டிகளில் விளையாடியுள்ள தாய்லாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா-தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.லீக் சுற்று போட்டியில் தாய்லாந்து அணியை இந்திய அணி 37 ரன்களுக்கு சுருட்டியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Womens Asia Cup 1st semi final INDW vs THAIW match today