5 முறை தோல்வி! இறுதியாக ஆசிய கோப்பையை வென்று சாம்பியன் ஆன இலங்கை! இந்திய அணி போராடி தோல்வி! - Seithipunal
Seithipunal


9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றுள்ளது. பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், 5 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மா 19 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வந்த உமா செத்ரி 9 ரன்னுக்கும், கவூர் 11 ரன்னுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதில்,  அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்னுக்கும், மந்தனா 60 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.  கடைசி கட்டத்தில் களமிறங்கிய ரிச்சா கோஷ் மற்றும் பூஜா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 18.4 ஓவரில், 2 விக்கெட்டு இழப்பிற்கு, 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஆசிய கோப்பையையும் கைப்பற்றியது.

இலங்கை அணியில் அதிரடியாக ஆடிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு 61 ரன்னும், ஹர்ஷிகா சமரவிக்ரமா 69 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Asia Cup Final 2024 India Sri Lanka 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->