#ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி : இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதல்.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய 7 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

 அதன்படி, இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து மதியம் 1:30 நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி  அக்டோபர் 15ம் தேதி மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது. இதில், இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய மகளிர் அணி தொடர்ந்து 8வது முறையாக ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 2004 முதல் இதுவரை 7 மகளிர் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. இதில் 7 முறையும் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு ஒரு முறை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோற்று 2வது இடத்தை பிடித்துள்ளது.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர்  மோதியுள்ளன. இதில் 4  முறையும் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women's Asia Cup final India vs srilanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->