ஆசியக்கோப்பை : இந்தியா -  தாய்லாந்து அணிகள் மோதல்.. டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் 19வது லீக் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 5 போட்டிகளில் விளையாடியுள்ள தாய்லாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா - தாய்லாந்து அணிகள் இதுவரை 3 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்திய கேப்டன் ஸ்ரீமிரிதி மந்தனா இன்றைய தினம் 100வது டி20 போட்டியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து மகளிர் அணி 11 வீரர்கள் :

 நன்னபட் கொஞ்சரோயெங்கை(வி.கீ), நட்டகன் சந்தம், நருயெமோல் சாய்வாய்(கே), சொர்ணரின் டிப்போச், சனிதா சுத்திருவாங், ரோசனன் கானோ, பன்னிதா மாயா, நட்டாயா பூச்சதம், ஒன்னிச்சா கம்சோம்பு, திபட்சா புத்தாவோங்ஸ்,

 இந்திய மகளிர் அணி 11 வீரர்கள் :

 ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா(கே), சப்பினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ்(வி.கீ), கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Asia Cup india vs Thailand india choose to bowl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->