ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி! - Seithipunal
Seithipunal


9-வது பெண்கள் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய வங்காளதேச அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 80 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் தரமாக பந்து வீசிய ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

சிறப்பாக ஆடிய ஷஸ்மிரிதி மந்தனா அரை சதம் கடந்து 55 ரன் எடுத்தார் . ஷபாலி வர்மா 26 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Asia Cup SemiFinal INDW vs BANW


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->