#ASIACUP2022 : இறுதிப்போட்டி முன்னேறப்போவது யார்.? இந்தியா-தாய்லாந்து மோதல்.. இந்திய அணி பேட்டிங்.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் முதல் அரையிறுதி போட்டியில் தாஸ் பண்ற தாய்லாந்து மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் இந்திய அணி 6 போட்டிகளில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 6 போட்டிகளில் விளையாடியுள்ள தாய்லாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு நடைபெறும்  முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா-தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா தாய்லாந்து அணிகள் இதுவரை 4 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.லீக் சுற்று போட்டியில் தாய்லாந்து அணியை இந்திய அணி 37 ரன்களுக்கு சுருட்டியது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம் 

தாய்லாந்து மகளிர் 11 வீராங்கனைகள் :

நன்னபட் கொஞ்சரோயெங்காய்(w), நட்டகன் சந்தம், நருயெமோல் சாய்வாய்(c), சனிடா சுத்திருவாங், சொர்ணரின் டிப்போச், பன்னிதா மாயா, ரோசனன் கானோ, நட்டாயா பூச்சதம், ஒன்னிச்சா கம்சோம்பு, திபட்சா புத்தாவோங்ஸ்,

இந்திய மகளிர் 11 வீராங்கனைகள் :

 ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(c), ரிச்சா கோஷ்(w), பூஜா வஸ்த்ரகர், தீப்தி ஷர்மா, ஸ்னேஹ் ராணா, ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Womens Asia Cup semifinal INDW vs THAIW india batting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->