மகளிர் ஐபிஎல்.. பெங்களூர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தானா நியமனம்.! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை மகளிர் ஐபிஎல் கமிட்டி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 4ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் பிப்ரவரி 13ம் தேதி நடைபெற்றது

இதில், பெங்களூர் அணி இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தானா, ரிச்சா கோஷ், ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் எல்லீஸ் பெர்ரி ஆகிய முக்கிய வீரர்களை வாங்கியுள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் கேப்டனாக இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தானாவை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens IPL smiriti Mandana appointed RCB captain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->