#BREAKING : உலக தடகள சாம்பியன்ஷிப் :19 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா.!  - Seithipunal
Seithipunal


உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். 

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

 இதனிடையே, நேற்று முன் தினம் நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.38 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 இந்த நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Athletics Championship silver medalist Neeraj Chopra!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->