இந்தியாவின் தங்கமகன் படைத்த மாபெரும் சாதனை! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
World Athletics Championships Neeraj Chopra
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.
மேலும், இந்த இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடம் பிடித்தார். டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6ம் இடம் பிடித்தார்.
தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உலக தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் தங்கம் வென்ற நீரஜ் நீரை சோப்ராவுக்கு வாழ்த்துக்கள்.
இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம் அவரை தடைகளிடத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், விளையாட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஒரு அடையாளமாக ஆக்கியுள்ளது" என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
English Summary
World Athletics Championships Neeraj Chopra