அரையிறுதிக்கு செல்ல மல்லுக்கட்டும் 4 அணிகள்! பாகிஸ்தான் நிலை?! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்ய ஆஸ்திரேலிய அணி, 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இன்னும் ஒரு அணிதான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டியுள்ள நிலையில், அந்த இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி எழுந்துள்ளது.

நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுமே தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெரும் கட்டாயத்தில் உள்ளது. அப்படியே வெற்றி பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் மூன்றில் ஏதேனும் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறும். தற்போதைய நிலையில் நியூசிலாந்து அணிக்கு நல்ல ரன்ரேட் உள்ளதால் அரையிறுதிக்கு சென்றுவிடும்.

எனவே, நாளை நடக்கும் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி தோற்றால் மட்டுமே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பற்றி சிந்திக்கவே முடியும்.

ஒருவேளை மூன்றில் இரு அணிகள் தோல்வியடைந்து, ஒரு அணி மட்டும் வெற்றிபெற்றால் அந்த அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

உதாரணத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் தங்களது கடைசி போட்டியில் தோல்வியடைந்தால், பாகிஸ்தான் அணி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். இதே நிலை தான் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கும் உள்ளது. 

நெதர்லாந்து அணிக்கும் அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், இன்று நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு இருக்கும்.  அப்படியே வீழ்த்தினாலும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவை வெற்றிகொள்ள வேண்டும். ரன்ரேட் பிரச்சனை வேறு உள்ளது. ஆக நெதர்லாந்து அணிக்கு வாய்ப்பு குறைவு தான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup 2023 semi final 3rd team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->