உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய பின்னடைவு; முதல் இரு இடங்கள் யாருக்கு..? - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 04ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள்  குவித்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன் 41 ரன்கள்,போலண்டு 10 ரன்கள் பெற்ற நிலையில்  ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 05ஆவது மற்றும் கடைசி நாள் போட்டி அவுஸ்திரேலிய  மெல்போர்னில் நடைபெற்றது.

333 ரன்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட்டான லயன் 41 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய அணி 83.4 ஓவரில் 234 ஓரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

 இந்தியாவுக்கு 340 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

340 ரன்கள்  என்ற இலக்குடன் இந்திய அணி 02ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 03 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

ரோகித் சர்மா 09 ரன்கள், கே.எல். ராகுல் ரன்கள் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்கள்களில், ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 04 ஆவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலும், ரிஷப் பண்டும் பொறுப்புடன் விளையாடினர் . இதன்போது,ஜெய்ஸ்வால் 127 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 50 ரன்களை  பெற்றார். முதல் இன்னிங்சிலும் அவர் அரை சதம் (82 ரன்கள் ) அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

18 ஆவது டெஸ்டில் விளையாடும் ஜெய்ஸ்வாலுக்கு இது 10ஆவது அரை சதமாகும். இதற்கமைய 49ஆவது ஓவரில் இந்தியா 100 ரன்களை மாத்திரம் பெற்றது.

இதனையடுத்து ரிஷப் பண்ட் 30, ஜடேஜா 02, நிதிஷ் 01, ஜெய்ஸ்வால் 84, ஆகாஷ் தீப் 07,  பும்ரா 0, சிராஜ் 0 என வெளியேறினர்.

இதனால் அவுஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 05 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணி 02-01 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இதனை தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

1. தென் ஆப்பிரிக்கா - 66. 67 சதவீதம்
2. ஆஸ்திரேலியா - 61.46 சதவீதம்
3. இந்தியா - 52.78 சதவீதம்
4. நியூசிலாந்து - 48.21 சதவீதம்
5. இலங்கை - 45.45 சதவீதம்
6. இங்கிலாந்து - 43.18 சதவீதம்
7. வங்காளதேசம் - 31.25 சதவீதம்
8. பாகிஸ்தான் - 30.30 சதவீதம்
9. வெஸ்ட் இண்டீஸ் - 24.24 சதவீதம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Test Championship points table


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->