மகளிர் ஐபிஎல்.. யுபி வாரியர்ஸை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.!
WPL 2023 eliminator Mumbai won against UP Warriors and qualify to final
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன. அதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.
இதில், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும்.
அதன்படி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -யுபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தடுமாறியது.
இறுதியாக யுபி வாரியர்ஸ் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி, முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
English Summary
WPL 2023 eliminator Mumbai won against UP Warriors and qualify to final