#WPL : மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு.!
WPL 2023 match full shedule
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராயல் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதில், ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக ரூ.12 கோடி நிர்ணயித்துள்ளது. மேலும், ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும், அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற முதலாவது மகளிர் ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை போட்டி போட்டு வாங்கினர்.
இந்த நிலையில் முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை மகளிர் ஐபிஎல் கமிட்டி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 4ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மேலும், அனைத்து போட்டிகளும் மும்பையில் உள்ள பிரபோர்ன் மற்றும் டிஒய் படேல் மைதானங்களில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ளது.
English Summary
WPL 2023 match full shedule