#WPL : டெல்லியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி.. ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேற்றம்.! - Seithipunal
Seithipunal


டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற 7வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணி மும்பை இந்தியன் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது ‌.

அதனைத் தொடர்ந்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL 2023 Mumbai Indians won by 8 wickets against Delhi Capitals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->