கோப்பையை வெல்லப்போவது யார்.. மும்பை - டெல்லி பலப்பரீட்சை.. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன. அதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

இதில் புள்ளி பட்டியலில்  முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும்.

அதன்படி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதின.

அதன்படி எலிமினேட்டர்  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -யுபி வாரியர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து முதலாவது மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

மெக் லானிங்(கே), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசானே கப், ஆலிஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா(வி.கீ), மின்னு மணி, ராதா யாதவ், ஷிகா பாண்டே

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி

யாஸ்திகா பாட்டியா(வி.கீ), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), மெலி கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL final Delhi Capitals won the toss choose bat against Mumbai Indians


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->