திண்டுக்கல் | 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையிடக்கூடாது! வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்! - Seithipunal
Seithipunal


செம்பட்டி அருகே 100 நாள் வேலை வழங்க வேண்டும் என பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது:

திண்டுக்கல் மாவட்டம்: செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டமான 100 நாள் வேலைகள் திட்டம் நடைபெற்று வருவதில், ஒரு சில பகுதி மக்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. 

அதில் குறிப்பாக 1-3 வார்டு பகுதிகளைச் சேர்ந்த ஆத்தூர் மேற்கு தெரு, வடக்குத்தெரு, வெள்ளாளர் தெரு, நாயுடு தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை வழங்க படாததால், ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு, தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.  இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது மக்கள் தெரிவிக்கையில்; "100 நாள் வேலை திட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தலையீடுவதால் அதிக முறைகேடுகள் நடைபெறுகிறது. வேலைக்கு வராதவர்களுக்கும் வருகை பதிவேட்டில் வந்ததாக பதிவு செய்கின்றனர். 

தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கப்படுகிறது. இதனால் வார்டு உறுப்பினர்கள்100 நாள் வேலைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்'' என பொதுமக்கள் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர், இதற்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததினால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 days workers demanding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->