மழை நீரை சேமிக்க1000 தடுப்பணைகள்.. அமைச்சர் துரைமுருகன் தகவல்! - Seithipunal
Seithipunal



 முதலமைச்சருடன் கலந்து பேசி 1000 தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்' சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இன்றைய சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றார்.

இது போன்று பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கால்வாய்களை தூர்வார மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-தடுப்பணைகளை அதிகம் கட்டி தண்ணீரை சேமித்தால் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பது உண்மை. எனவே நிதி அமைச்சர் எனது துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சருடன் கலந்து பேசி 1000 தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1000 Check Dams to store rain water Minister Durai Murugan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->