சென்னை மக்களே உஷார்! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பும் தருவாயில் உள்ளன. குறிப்பாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்ட உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்பொழுது 22 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கத்தை சுற்றியுள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

கடந்த மூன்று நாட்களாக 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட வந்த நிலையில் நேற்று வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 அடியாக அதிகரிக்கப்பட்டது. கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 642 கன அடி நீர் வருவதால் அதன் முழு கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்பொழுது 2,850 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக கன மழை பெய்தால் நீர் வரத்து அதிகரிக்கும். இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை ஓரிரு நாட்களில் எட்டி விடும் என்பதால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளது. கனமழை மேலும் தொடருமே ஆனால் நீர் திறப்பின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று புழல் ஏரியில் இருந்தும் தற்பொழுது 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் செல்லும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுகளத்தூர் ,காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் ,வழுதிமேடு, திருநீர்மலை மற்றும் அடையார் ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 cubic feet of water released from Sembarambakkam lake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->