ரூ.10,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் : புகார் அளித்தவரை பொறியாக வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையின் போரில் சிக்கி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழவில்லானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் வீடு கட்டும் பணிக்காக சவடு மண்ணை அள்ளுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சித்ரா தேவியை அணுகி உள்ளார். இதற்கு அனுமதி வழங்க கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி பத்தாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதில் முதல் தவணையாக ரூ. 5000 தரவேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரவேல் இது குறித்து இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர்  லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கொடுத்த யோசனைப்படி, செய்யுமாறு கூறிவுள்ளனர். அதற்கு குமரவேல் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனை அடுத்து நேற்று கமுதி தாசில்தார் அலுவலகத்திற்கு லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார் அதற்கு அவர் கிராம உதவியாளர் வேல்முருகனிடம் பணத்தை கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது இதனை எடுத்து ரூ.5000 கொடுத்த போது அங்கு மறைந்த நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் அவரை மடக்கி பிடித்தனர் கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி உதவியாளர் வேல்முருகன் இருவரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10k bribe taken by village administration officer Anti bribery department caught in a trap


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->