#திருநெல்வேலி || கிரிக்கெட் விளையாடியபோது பரிதாபம்.! கிணற்றில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் பலி.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய 10ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 10ஆம் வகுப்பு மாணவன் முகமது அப்சர். இவர் நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்பொழுது கிரிக்கெட் பந்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்ததால், முகமது அப்சர் உட்பட 4 பேர் கிணற்றில் குதித்து பந்தை எடுக்க முயன்றுள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக முகமது அப்சர் நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மாணவனை பிணமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class boy drowned in the well in tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->