10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. இந்த இணையதக முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில்,10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகளை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மறுகூட்டலுக்கு வரும் ஆக.,25, 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 தனித்தேர்வர்கள் வருகிற 23.08.2022 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 03.00 மணி தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன், "NOTIFICATION < SSLC SUPPLEMENTARY EXAM, AUG 2022< PROVISIONAL MARK SHEET DOWNLOAD" எனத் தோன்றும் வாசகத்தினை "Click" செய்தால், தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

மறுகூட்டலுக்கு விண்ணபிக்க விரும்புவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 25.08.2022 (வியாழக்கிழமை) மற்றும் 26.08.2022 ( வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடத்திற்கு 205 ரூபாய் செலுத்த வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th Result Today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->