#சென்னை || தண்ணீர் லாரியின் டயரில் சிக்கி 10 வயது சிறுமி பலி.!! லாரி டிரைவர் எஸ்கேப்.!!
10year old girl died trapped in water truck in Chennai
சென்னை கோவிலாம்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் படித்து வரும் அந்தச் சிறுமி தனது தாய் கீர்த்தியுடன் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்துள்ளார்.
அப்போது வேகமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏரியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரியின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது பற்றி பல புகார்கள் அளித்த நிலையிலும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலை மறைவாக உள்ள தண்ணீர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
English Summary
10year old girl died trapped in water truck in Chennai