11  கிராமத்தில் படித்தவர்களுக்கு அரசு சார்பில் வேலை...! - Seithipunal
Seithipunal


அரசு புறம்போக்கு நிலம் உட்பட, 4,564 ஏக்கர் நிலம் 'புதிய விமான நிலையம் அமைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அமைச்சர்கள், நிலத்தின் உரிமையாளர்களுக்கு, நிலத்தின் சந்தை மதிப்பை விட, மூன்றரை மடங்கு கூடுதலாக வழங்கப்படும்' என்று தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

புதிய விமான நிலையத்தை சென்னையில் இருந்து 65 கி.மீ.,தொலைவில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 4 கிலோ மீட்டர் தொலைவில்,அமைக்க அரசு முடிவெடுத்து உள்ளது. இதற்காக நிலம் எடுப்பு பணிகளை, அரசு துவங்கிய நிலையில், எங்கு போனாலும், இதுபோன்ற திட்டங்களுக்கு, விளை நிலங்களை எடுப்பதை தவிர வேறு வழியே இல்லை.

புதிய விமான நிலையம் அமைக்க, 11 இடங்களில் ஆய்வு செய்த நிலையில், இறுதியாக படாளம், பன்னுார், திருப்போரூர், பரந்துார் என, நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டதில், திருப்போரூர், படாளம் அருகே கல்பாக்கம் அணு மின் நிலையம் இருப்பதால், சுற்றுச்சூழல் சான்றிதழ் பெற முடியாது. 

எனவே, பரந்துார் அல்லது பன்னுார் முடிவு செய்யப்பட்ட நிலையில், பன்னுாரில் அதிக வீடுகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால், பரந்துாரில் குறைந்த குடியிருப்புகளே பாதிக்கப்படுகின்றன. எனவே, இறுதியாக பரந்துார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலத்தின் சந்தை மதிப்பை விட, மூன்றரை மடங்கு கூடுதல் பணம் வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு குடியிருக்கும் மக்களுக்கு விமான நிலையம் அமையும் பகுதிக்கு அருகே,  குடியிருக்க இடம் தருவதுடன் வீடு கட்ட பணமும் வழங்கப்படும். புதிய விமான நிலையம் அமைப்பதால், தமிழகத்தின் பொருளாதாரம் உயரவும்,அதனால் சென்னையில் நெரிசலையும் குறைக்க முடியும். எனவே விவசாயிகளுக்கு அரசு உதவியாக இருக்கும்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'சாலை போட நாங்கள் எதிரியாக இல்லை. விவசாயிகளை நேரில் அழைத்து பேசி, அவர்கள் தேவையை நிறைவேற்றி விட்டு சாலை போடுங்கள்' என, சட்டசபையில் முதலமைச்சர் பேசினார்.நிலம் கைப்பற்றப்படும் 13 கிராமத்தில், இருக்கும் படித்தவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப  , அரசு சார்பில் வேலை வழங்கப்படும்.

இக்கிராமங்களில், 1,005 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் அனைவருக்கும் இடம், வீடு கட்ட பணம், இழப்பீடு தொகையும் வழங்க உள்ளோம். மொத்தம் 4,563.56 ஏக்கர் நிலம் கைபற்றப்பட உள்ளது. இதில், 3,246.38 ஏக்கர் தனியார் பட்டா நிலமும், 1,317.18 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், பட்டா நிலத்தில், 2,447 ஏக்கர் நஞ்சையும்  799.59 ஏக்கர் புஞ்சையும் உள்ளது. சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்களை வைத்து, நீர் நிலைகளை காப்பாற்றுவது எப்படி என பரிந்துரைகள் பெற்று, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்று அமைச்சர்கள் கூறினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 Government jobs for those educated in villages


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->