வார்டன் வீட்டை பதம் பார்த்த கொள்ளையர்கள்!! 11 சவரன் நகை அபேஸ்!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பழைய ஹவுசிங் போர்டை சேர்ந்த குப்புசாமி என்பவர் மகன் ஆறுமுகம் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் தொடர் விடுமுறையின் என்பதால் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான ஒரத்தநாட்டுக்கு சென்றுள்ளார்.

விடுமுறை நாட்களை கழித்த பிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பூட்டிச்சென்ற வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆறுமுகம் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து உதவி ஆய்வாளர் சத்தியநாதன் தலை மேலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர் இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 Sawaran jewelery robbery in Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->