இயல்பு நிலைக்கு திரும்பிய தக்காளி விலை.. இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
11.08.2023 koyambedu Market vegetables price list
நாடு முழுவதும் பெய்த கனமழை காரணமாக உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் விலை வரத்து குறைவால், கடும் விலையேற்றத்தை சந்தித்தது.
அதன்படி தமிழகத்தில் கடந்த இரண்டு மாத காலமாக தக்காளியின் விலை ஒரு கிலோ 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனையை தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதன்படி நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு காய்கறி சந்தை விலை நிலவரம் (1 கிலோ)
பெரிய வெங்காயம் -ரூ.25
சாம்பார் வெங்காயம் - ரூ.100
அவரைக்காய் - ரூ.40
பீன்ஸ் - ரூ.100
பீட்ரூட் - ரூ.40
பாகற்காய் - ரூ.50
கத்தரிக்காய் - ரூ.40
முட்டைகோஸ் - ரூ.20
கலர் குடைமிளகாய் ரூ.180
பச்சை குடைமிளகாய் - ரூ.60
கேரட் - ரூ.50
காலி ஃப்ளவர் - ரூ.30
சவ் சவ் - ரூ.25
கொத்தவரை - ரூ.40
முருங்கைக்காய் - ரூ.40
பூண்டு - ரூ.200
இஞ்சி - ரூ.220
பச்சை மிளகாய் - ரூ.70
வெண்டைக்காய் - ரூ.40
மாங்காய் - ரூ.90
பீர்கங்காய் - ரூ.50
உருளைக்கிழங்கு - ரூ.32
முள்ளங்கி - ரூ.20
புடலங்காய் - ரூ.30
சுரைக்காய் - ரூ.20
English Summary
11.08.2023 koyambedu Market vegetables price list