தேர்வில் பிட் அடித்த மாணவன்.. ஆசிரியர் கண்டுபிடித்ததால் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


11ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், கணியூர் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் வந்தார்.

தற்போது பள்ளியில் ரிவிஷன் தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில்  கலைச்செல்வன் பிட் அடித்ததாகாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ஆசிரியர் அவரை மன்னித்து மீண்டும் தேர்வு எழுதி வைத்துள்ளார் ஆனாலும் மீண்டும் இரண்டாவது முறையாக மீண்டும் பிட் அடித்துள்ளார்.

இதனை கண்டு ஆசிரியரை தலைமை ஆசிரியர் அறைக்கு அனுப்பி உள்ளார் . தலைமை ஆசிரியர் மாணவனிடம் அவரது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார் . இதில்,  மனமுடைந்த கலைச்செல்வன் மாடியில் இருந்து குதித்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவருடன் தேர்வு எழுதிய மாணவர்கள் இடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th grade student Committed Suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->