ஸ்தம்பிக்குமா தமிழகம்? வேலை நிறுத்தம், சாலை மறியல் போராட்டம்! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?!
12 hours work issue CITU protest announce
12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வரும் மே.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் நடத்திய அவரச ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்ட தொடரின் கடைசி நாழி பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத் திருத்த மசோதா சட்டமாகினால், 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றப்பட்டு, தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துவிடும் என்று, அதிமுக, பாமக மற்றும் திமுகவின் கூட்டணி காட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மணி நேர வேலைச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியறுத்தி வரும் மே மாதம் 12ல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி தமிழகம் முழுவதுமே இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், தமிழக அரசு இந்த இதனை கைவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
12 hours work issue CITU protest announce