திருவண்ணாமலை ஆட்சியர் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!!
12 IAS officer transferred in tamilnadu
தமிழ்நாட்டில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களாக உயர் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்வது தொடர்கதையாக வருகிறது.
இந்நிலையில், நேற்று 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,
1) சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கற்பகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3) தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4) வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த குமாரவேல் பாண்டியன், தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6) வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7)செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த முருகேஷ், வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9) தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன், உயர்க்கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10) விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய வணிக இயக்குநராக பொறுப்பு வகித்த நடராஜன், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11) வருவாய் நிர்வாக முதன்மைச் செயலராக இருந்த பிரகாஷ், வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக லட்சுமி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
12 IAS officer transferred in tamilnadu