வேலூரை தொடர்ந்து "நெல்லையிலும்" 12 சிறார்கள் தப்பி ஓட்டம்..!! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு வேலூரில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறார்கள் தப்பியோடி உள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 20 சிறார்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இரவு இரவு உணவு வாங்கிக் கொண்டிருந்த சிறார்கள் திடீரென கூர்நோக்கி இல்லத்தின் வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லை மாநகர் காவல் துறை ஆணையர் ராஜேந்திரன், நெல்லை மாநகர் கிழக்கு காவல் துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுவர்கள் உள்ளனரா என நெல்லை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நேற்று தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் இந்த கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்து பாதுகாப்பாக இருப்பதாகவும் சிறுவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்த நிலையில் இன்று அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 minors escaped from govt observation home in thirunalveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->