கேரளாவுக்கு கடத்தி செல்லப்படும் ரேஷன் அரிசி! திடீர் சோதனை! சிக்கிய 12 டன் ரேஷன் அரசி! - Seithipunal
Seithipunal


கடையநல்லூர் அருகே லாரியில் கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அரிசிகள் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் இலவசமாக வழங்கும் அரிசியை கடத்தல் கும்பல் வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசிகளை கடத்திச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலிருந்து செங்கோட்டை வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர் புகார் வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அதிகாலை வேலையில் போலீஸ் தீவிர வாகன சபையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கடையநல்லூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த குமரி மாவட்ட பதிவில் கொண்ட லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் கோழி தீவனங்களை வைத்து மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகளை மறைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து போலீசாரின் தகவலின் தகவலின் பெரில் சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் லாரியில் இருந்த 12 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் விலங்கோடு தாலுகா வேம்புவிளை என்ற ஊரை சேர்ந்த லாரி ஓட்டுனர் அசோக் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இது தொடர்பாக லாரியின் உரிமையாளர், போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 tonnes of ration rice smuggled to Kerala in a truck seized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->