குன்னூரில் 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்திய 1200 மாணவர்கள்!
1200 students in coonoor made a world record around silambam in 78 minutes
நீலகிரி மாவட்டம், குன்னூரில் தேசிய சிலம்ப பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக, 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனை நிகழ்த்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி குன்னூர் வெலிங்டன் கண்டோன் மைதானத்தில் நடைபெற்ற 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியில், மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் லோட்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சுமார் 1200 மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு 78 நிமிடங்கள் சிலம்பம் சுழற்றி சாதனை நிகழ்த்தினர். அப்போது வீரர்-வீராங்கனைகள் கண்ணை கட்டியும், பானைகள் மீது நின்றும் சிலம்பம் சுழற்றியது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனையில் இடம்பிடித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பரத நாட்டியம், கேரம் போர்டு, ஓவியம், கராத்தே, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்ட நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
English Summary
1200 students in coonoor made a world record around silambam in 78 minutes