ஒகேனக்கல் ஆற்றில் 12,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான  கேரெட்டி, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி,பிலிகுண்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரெனெ நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 5 ஆயிரம்  கன அடியாக நீர்வரத்து  இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், கர்நாடகாவில் இருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஒகேனக்கல் அருவி மற்றும்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயரக்கூடும். அதுமட்டுமல்லாமல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளை நம்பி வாழும் விவசாயிகளின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து  கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தால், மேலும் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்யப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12000 cubic feet of flow in the hogenakkal river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->