தொடரும் சோகம்.. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை.!
12th std student suicide for NEET exam fear in thenkasi
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த செவல்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சோமதுரை. விவசாய அண்ணா இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் திவ்யா என்ற 17 வயது மூத்த மகள் உள்ளார்.
இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். சில மாதங்களாக அங்கு தினமும் சென்று அவர் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மாணவியின் பெற்றோர் திவ்யாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
12th std student suicide for NEET exam fear in thenkasi