பந்தலூர் : சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த காப்பகம் - மனநலம் குன்றிய 13 பேர் மீட்பு..!! - Seithipunal
Seithipunal



நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள குந்தலாடி பகுதியில் மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம் இயங்கி வந்துள்ளது. இந்த காப்பகம் அரசு அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக, மனநலம் குன்றியவர்களை எந்த அடிப்படை வசதிகளும் இன்றி அடைத்து வைத்துள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. 

இதையடுத்து மருத்துவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட குழுவினர் அந்த காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் 13 மனநலம் குன்றியவர்கள் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ளதையும், அந்த நபர்களின் விவரங்கள் எதுவும் முறையாக பராமரிக்கப் படவில்லை என்பதையும் ஆய்வில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

மேலும் காப்பகம் நடத்த அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த 13 மனநலம் குன்றியவர்களையும் மீட்ட அதிகாரிகள், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "லவ்ஷேர் என்ற பெயரில் அகஸ்டின் என்பவர் இந்த் மையத்தை சட்ட விரோதமாக நடத்தி வந்துள்ளார். 

எந்த வித ஆவணங்களும் இல்லாமல், அரசு அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக, வெறும் வணிக நோக்கத்தில் மட்டுமே அவர் இந்த மையத்தை காப்பகம் என்ற பெயரில் நடத்தி வந்துள்ளார். இங்கிருந்து மீட்டுள்ள 13 பேரை கோவையில் உள்ள மனநலம் குன்றியோருக்கான பாதுகாப்பு மையத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். 

மேலும் இந்த மையத்தில் இறந்தவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளோம். அவர்களை யாருக்கும் தெரியாமல் அங்கேயே புதைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணையில் உள்ளோம். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 Mentally Affected People Rescued From an Illeagal Asylum in Pandalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->